கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Friday, April 6, 2018

ஆவாரம் பூ

படம்: ஆவாரம் பூ
குரல்: S.P.பாலசுப்ரமணியம் - ஜானகி 
இசை: இளையராஜா
பாடல்: வாலி 
வெளியான ஆண்டு:1992

சாமி கிட்ட சொல்லி வெச்சு

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே 
முத்துமணியே பக்கத்துனையே 
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே
சாமிக் கிட்ட .....

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமிக் கிட்ட ......

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் மேகம் 
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும்  கற்பனையே
சாமிக் கிட்ட ........

Sources: https://www.facebook.com

==============================

படம்: ஆவாரம் பூ
குரல்: S.P.பாலசுப்ரமணியம் - ஜானகி 
இசை: இளையராஜா
பாடல்: வாலி 
வெளியான ஆண்டு:1992

அடுக்கு மல்லி

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்

பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை

பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

***

ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப்போல கண்டானங்கே மொட்டுப்போல ரோசா

பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு
சொன்னான் அவன் லேசா

ஆண் : ஹஹ்ஹஹ்ஹா

பெண் : காணாதத கண்டா அப்போ ஆனானய்யா பாஸா

ஆண் : என்னாச்சு...இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதும் ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு

பெண் : அட வாய்யா மச்சானே...
யோகம் இப்போ உண்டாச்சு...

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை

பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

***

பெண் குழு : ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட
எட்டிப் பார்க்கும் ஆவாரம்பூ வெட்கத்தோடு ஓட...

ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட

பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்ட வரும் எப்போதும்

ஆண் : அட வாய்யா ராசாவே
அய்யா இப்போ உன் நேரம்

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்

பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை..

Sources: http://www.tamilpaa.com

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...