கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Wednesday, March 21, 2018

நினைத்ததை முடிப்பவன்

திரைப்படம்: நினைத்ததை முடிப்பவன்

கண்ணை நம்பாதே ....

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

குறிப்பு :

இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு.

முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம்.

==================================================

திரைப்படம்: நினைத்ததை முடிப்பவன்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து......

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் 
(ஒருவர் மீது )

ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2)
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
(ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் 
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் 
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் 
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் 
(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள் 
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் 
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் 
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள் 
(ஒருவர் சொல்ல )

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும் 
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும் 
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு (2)
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு 

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ....
=========================================

திரைப்படம்: நினைத்ததை முடிப்பவன்

பூமழை தூவி ....

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது -
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது -
மங்கல குங்குமம் சிரிக்கின்றது

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா -
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!
(பூமழை)

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா -
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!
(பூமழை)

கால்பட்ட இடமெல்லாம் மலராக
கைபட்டபொருளெல்லாம் பொன்னாகணும் -
உன்கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...