கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Monday, October 2, 2017

வசந்த மாளிகை


மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே 
நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை 
என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் 
அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே 
உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலம் என விரிந்த கூந்தல் 
கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் 
கட்டி அணைத்து கவி பாட

மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே

பாடி வரும் வண்ண நீரோடை 
உன்னை பாத பூஜை செய்து வர
ஓடி வரும் அந்த ஓடையிலே 
உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

மல்லிகை காற்று மெல்லிடை 
மீது மந்திரம் போட்டு தாலாட்ட
வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து 
வண்ண இதழ் உன்னை நீராட்ட

மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே

அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்

உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன்

மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன..ஆ ஆ ஆ
இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
அன்பு காணிக்கைதான் கண்ணே
ஆ ஆ ஆ ஆ ஆஅ
அன்பு காணிக்கைதான் கண்ணே


===================================================

பாடல்: கலைமகள் கைப் பொருளே
பாடகர்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
திரைப்படம்: வசந்த மாளிகை

கலைமகள் கைப் பொருளே – உன்னை

கலைமகள் கைப் பொருளே – உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ

(கலைமகள்)

நான் யார் உன்னை மீட்ட – வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
எனோ துடிக்கின்றேன் – ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ

(கலைமகள்)

சொர்க்கமும் நரகமும் நம் வசமே – நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்திய தர்மங்கள் நிலைக்கட்டுமே – இந்தத்
தாய்மையின் குரலும்தான் ஒலிக்கட்டுமே

(கலைமகள்)

Sources: https://tamilmani.wordpress.com


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...