கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Friday, September 29, 2017

சரஸ்வதி பூஜை பாடல்கள்மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி

நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ

வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்…கலைவாணி நின் கருணை தேன் மழையே

கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

(கலைவாணி)
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி

(கலைவாணி)
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்

(கலைவாணி)
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்

(கலைவாணி)

Sources: https://tvsubha.wordpress.com
===========================================================

சிவாயநம
திருச்சிற்றம்பலம்

கலைமகளின் அருளைப்பெற்று கல்வி,கேள்வி,ஞானத்தில் சிறந்து விளங்க குமரகுருபரர் அருளிய

சகலகலாவல்லி மாலை

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்

தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்

குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்

நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து

அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை

கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே

Sources: https://www.facebook.com

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...