கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Sunday, August 13, 2017

அவள் ஒரு தொடர்கதை

திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு...வீதி இருக்கு

தெய்வம் தந்த வீடு...வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை எனைக்கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி 
ஆதி வீடு...அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

வெறும் கோயில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன...கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத்தோண்டி தண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி
என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன...பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு.

Sources: http://priyatamilsongs.blogspot.in

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...