கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Monday, June 12, 2017

ஆண்பாவம்


திரைப்படம்:  ஆண்பாவம்
நடிகர்கள்:  ஜனகராஜ் , R.பாண்டியராஜன், ரேவதி, சீதா
இசைஅமைப்பாளர்: இளையராஜா
இயக்குனர்: R.பாண்டியராஜன்
பாடல் வெளியான ஆண்டு: 1986

குயிலே குயிலே பூங்குயிலே

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காக தான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

தொட்டாலே நீ சினுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்குதடி
பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு

சிட்டுகொரு பட்டுத் துணி கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா

ஒட்டிகிற கட்டிகிற சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்

நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்

இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசப் பட்டா
ஸ்ரீஆசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா

அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கத அழிச்சா அவன் எழுதப்போரான்

பெண்ணே பழி அவன் மேல சொல்லாதேடி
ஆண்பாவம் பொல்லாதது கொல்லாதடி

தவறொ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்குஸ்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே...
======================================

திரைப்படம்:  ஆண்பாவம்
நடிகர்கள்:  ஜனகராஜ் , R.பாண்டியராஜன், ரேவதி, சீதா
இசைஅமைப்பாளர்: இளையராஜா
இயக்குனர்: R.பாண்டியராஜன்
பாடல் வெளியான ஆண்டு: 1986

என்னபாட சொல்லாதே

என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்... (3)
அத கேட்டா மடயனுக்கும் ஞனம் பொறந்திதும்
மூடி கிடக்கும் பல கண்ணும் தொறந்திடும்...

தேவாரமும் படிச்சோம் திருவாசகம் படிச்சோம்
தெரியாம திருக்குரளும் தான் படிசோம்
ஆனான படிப்பை எல்லாம் அன்னாடம் படிசுப்புட்டு
புரியாம தெரியாம தான் முழிச்சோம்

அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வை பாட்டி
அதக் கூட பாடி என்ன கிழிசிப்புட்டோம்..
அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வை பாட்டி
அதக் கூட பாடி என்ன கிழிசிப்புட்டோம்

நாடும் என்னச்சி நம்ம ஊரும் என்னச்சி
அட பேசி பேசித்தான் நல்ல பொழுதும் போயச்சி
இந்த டெசம் ரொம்ப மோசம் இத பார்கும்போது இப்போ

என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன் (2)

காம்போதியும் தெரியும் கல்யாணியும் புரியும்
பொதுவாக நெனச்சதும் நான் பாட்டெடுப்பேன்
ஆகாத பொழப்பை எல்லாம் அனியாய நடப்பை எல்லாம்
அஞ்சாம என் பாட்டில் போட்டுடைப்பேன்

நாய் வாலை நிமிர்துறதும் காக்காய வெளுக்குறதும்
அம்மாடி யாரால ஆகும் இப்போ
நாய் வாலை நிமிர்துறதும் காக்காய வெளுக்குறதும்
அம்மாடி யாரால ஆகும் இப்போ

பார்க்க போனாக்கா நான் பொட்டப் புள்ளதான்
அட போட்டி போட்டாக்கா ரொம்ப கெட்ட புள்ளதான்
ஒரு வேகம் ஒரு கோபம் ஒன்னு சேரும்போது இப்பொ

என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன் (2)
அத கேட்டா மடயனுக்கும் ஞனம் பொறந்திடும்
மூடி கிடக்கும் பல கண்ணும் தொறந்திடும்
பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்..


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...