கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Saturday, May 6, 2017

பராசக்தி

படம்: பராசக்தி
வரிகள்: உடுமலை நாராயண கவி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952 

கா கா கா கா கா கா

கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா

எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே

இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க
======================

படம் : பராசக்தி 
இசை : சுதர்சனம் 
பாடல் : அனல்தங்கே 
பாடியவர் : M.S. ராஜேஸ்வரி 

ஒ....ரசிக்கும் சீமானே வா

ஒ....ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து 
களிக்கும் நடனம் புரியோம் 

அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம் 
அளிக்கும் கலைகள் அறிவோம்

கற்சிலையின் சித்திரம் கண்டு 
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு 
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு 

வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று 
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் 
அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா)

வானுலகம் போற்றுவதை நாடி 
இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி 
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி 
வெறும் ஆணவத்தினாலே 
பெரும் ஞானியைப் போலே நினைத்து 
வீணிலே அலைய வேண்டாம்!!!

தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் 
அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா) 

Sources: 

http://indusladies.com

http://indusladies.com

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...