கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Thursday, May 4, 2017

ராணி சம்யுக்தா

திரைப்படம்:ராணி சம்யுக்தா
இசை:கே.வி. மகாதேவன்
பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன்

இதழ் இரண்டும் பாடட்டும் இமை இரண்டும் மூடட்டும்

இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும்..........

புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
நீயும் பழம் பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே
இதழ் இரண்டும்........

வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
கண்ணே இதழ் இரண்டும்...........

வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார் இன்று
மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்

கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும்.........
===========================================================

திரைப்படம்:ராணி சம்யுக்தா
இசை:கே.வி. மகாதேவன்
பாடகர்கள்:ஜமுனாராணி

சித்திரத்தில் பெண்ணெழுதி சீர் படுத்தும் மாநிலமே

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ

காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு கண்ணீர்தான் உன் வழியோ
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ
மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு வாய்த்த விதி இதுதானோ
===========================================================


திரைப்படம்:ராணி சம்யுக்தா
இசை:கே.வி. மகாதேவன்
இயற்றியவர்:கண்ணதாசன்
பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ஓ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா வண்ண பூச்சூட வா

ஓ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா
வண்ண பூச்சூட வா வெண்ணிலா ஓ வெண்ணிலா...
ஓ மன்னவா.. வா மன்னவா
வண்ண்ப் பூச்சூட வா மன்னவாஓ மன்னவா..

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நினைவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலைப் பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
(ஓ மன்னவா)

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்து கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
( ஓ மன்னவா)
===========================================================


திரைப்படம்:ராணி சம்யுக்தா
இசை:கே.வி. மகாதேவன்
இயற்றியவர்:கண்ணதாசன்
பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும்...


நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும்

மனதிலேகதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்குகண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை -
என்அழகில் விளையாடும் இவ்வேளை
வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே
( நிலவென்ன )

இரு கரை போல தனியாக இருந்தோம்

அக்கறையோடு இங்கே கலந்தோம்
வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே
கவலை அல்லவோ கொண்டு வந்தேன் -
நான்காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்
பருவங்கள் ஒன்றாக மகிழும் நிலையில் -
நீலப்பட்டாடை போல் தோன்றும் வானோடு
( நிலவென்ன )
===========================================================
திரைப்படம்:ராணி சம்யுக்தா
இசை:கே.வி. மகாதேவன்
இயற்றியவர்:கண்ணதாசன்
பாடகர்கள்: பி. சுசீலா

நெஞ்சிருக்கும் வரைக்கும நினைவிருக்கும்...


நெஞ்சிருக்கும் வரைக்கும நினைவிருக்கும்

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

கொஞ்சும் இளமை குடியிருக்கும்

கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

வாளினிலே ஒருகை ம*ல*ர்ந்திருக்கும்

வாளினிலே ஒருகை ம*ல*ர்ந்திருக்கும்
மறுகை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒருகை ம*ல*ர்ந்திருக்கும்
மறுகை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினிற்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினிற்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்

இந்த தோகைகென்றே இதயம் திறந்திருக்கும்

எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் !

Sources: http://indusladies.com

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...