கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Sunday, April 9, 2017

முதல் மரியாதை

படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், S.ஜானகி

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு

இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்

கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், ஜானகி

பூங்காற்று திரும்புமா?

என் பாட்ட விரும்புமா?
பாராட்ட* மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

(பூங்காற்று திரும்புமா…)


ராசாவே வருத்தமா?

ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல

மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி

சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ரக சோகந்தானே


யாரது போரது?


குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா


(பூங்காற்று திரும்புமா…)


உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்

நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே

முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே


பூங்குயில் யாரது?


கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க


அடி நீதானா அந்தக் குயில்?

யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நாந்தானே அந்தக் குயில்

தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்: முதல் மரியாதை (1985)
பாடியவர்: இளையராஜா & சித்ரா
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

செவிலி…..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)


Sources: 

http://indusladies.com

http://indusladies.com


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...