கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Tuesday, January 17, 2017

நீதிக்கு பின் பாசம்

திரைப்படம்: நீதிக்கு பின் பாசம்

காடு கொடுத்த ....

காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
(காடு)

சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு -
அதைநம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு..நாடு நகரம் ஊராச்சு..
(காடு)

தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே -
இதைக்காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
(காடு)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அக்கம் பக்கம் பார்க்காதே ...

அக்கம்பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹாண்டில் பாரை ஓடிக்காதே

கையக் கைய வளைக்காதே
கண்ணைக் கண்டு மிரளாதே
பையப் பையா ஒதுங்கதே
பள்ளம் பார்த்து போகாதே (அக்கம் )

போக்குவரத்து அதிகாமிருக்கு
மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ
பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ - இந்தப்
பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ
ஆஆஆஆ...ஓஓஓஓ.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (அக்கம்)

போலீஸ்காரன் ஸ்டாப்பின்னு சொன்னா
பொத்துன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ

சைக்கிள் போற வேகத்தில்
யார் தடுத்தாலும்பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ

ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு
அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு

அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு - இந்த
அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு

ஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (அக்கம்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மானல்லவோ கண்கள் தந்தது ...

மானல்லவோ கண்கள் தந்தது
ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது
ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது
ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது

ஆஆஆஆஆஅ
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆ ஹா
சின்ன யானை நடையைத் தந்தது
ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ம் ஹும்
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு
ஆ ஆஆ ஒ ஒ ஒ
நடையழகு நடனம் ஆனது
நாலழகும் என்னை வென்றது

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன்

மானல்லவோ கண்கள் தந்தது
ஆ ஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது
ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது
ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது
ஆஆஆஆஆஅ
தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆஹா
சின்ன யானை நடையைத் தந்தது
ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ம் ஹும்
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
+++++++++++++++++++++++++++++++++++++++++++

வாங்க வாங்க ....

வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
(வாங்க)

பட்டப்பகல் நேரங்கண்டு தூங்குறாளையா -
அந்திபட்டவுடன் எண்ணி எண்ணி ஏங்குறாளையா
கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா -
சிட்டுக்குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா
(வாங்க)

வெள்ளித் தட்டில் சோறெடுத்து வைக்கிறாளையா -
சோத்தைவிட்டு விட்டுத் தரையிலே கை வைக்கிறாளையா
துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா -
ஒருதூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா
(வாங்க)

வயசு வந்த பெண் முகத்தைப் பாருங்களையா -
நீங்கமனசு வச்சு இந்தக் கேசைத் தீருங்களையா
திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா -
கன்னம்சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன் சொல்லுங்களையா
(வாங்க)
+++++++++++++++++++++++++++++++++++++++++++

சிரித்தாலும் போதுமே ....

சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பார்த்தாலும் போதுமேபழச்சாறு ஊறுமே..
ம்ம்..ம்ம்..ம்ம்.ஆஹாஹாஹாஹா
(சிரித்தாலும்)

நினைத்தாலும் போதுமேநிலை மாறிப் போகுமே
அணைத்தாலும் போதுமேஅலைபாயும் நெஞ்சமே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ
(சிரித்தாலும்)

இல்லாத ஏட்டிலேஎழுதாத பாட்டிலே
சொல்லாத சொல்லிலேசுவையாகும் காதலே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ
(சிரித்தாலும்)
++++++++++++++++++++++++++++++++++++++

இடி இடிச்சு .....

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சுபடிப்படியா
வளர்ந்த ஆசை பக்குவமாச்சு - இன்று
பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு
(இடி)

குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு -
சும்மாகுடுகுடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு
படபடப்பா போன வேங்கை பாய்து நின்னு -
அதைப்பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு
(இடி)

அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு -
ஒருபத்து மாதம் போன பின்னல் பாடும் தாலாட்டு
அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு -
படுசத்தம் போட்டுக் குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு
(இடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++

Sources: http://mgrsongs.blogspot.in

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...