கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Saturday, September 24, 2016

சிட்டுக்குருவி

காவேரி கரை ஓரத்துல

Movie: Chittu Kuruvi
Music: Ilaiyaraaja
Year: 1978
Lyrics: Vaali
Singers: S.P.Balasubramaniam

காவேரி கரை ஓரத்துல 
ஏலாலம்பர ஏலா 

கன்னிப்பொண்ணு வர நேரத்துல 
ஏலாலம்பர ஏலா 

கூவாத குயில் கூவுதடி 
ஏலாலம்பா 
ஏலாலம்பா 

மயிலும் குலுங்கி ஆடுதடி 
ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா (இசை) 

இஷ் ஆ

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 

வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி 
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி 
வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி 
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி 

சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு பாவம் தவிக்கிது 
கோவம் பொறக்குது பக்கம் வர வெக்கம் வந்து போராடுது 

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 

கொட்டடி சேல கட்டிய பொண்ணு 
ஏலாலம்பர ஏலா 

கொட்டடி மேளம் தட்டடி தாளம் 
ஏலாலம்பர ஏலா 

முத்திர போட்ட சித்திர பொண்ணே 
ஏலாலம்பா 

ஏலாலம்பா 
ஏலாலம்பா 
ஏலாலம்பா மெல்ல சிரிக்கிர கள்ளச்சிரிப்பென்ன 
ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா

அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா 
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா 
அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா 
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா 

இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது 
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது 

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி 
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி 
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் 
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 
அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 
அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம் 

காவேரி கரை ஓரத்துல 
ஏலாலம்பர ஏலா 

கன்னிப்பொண்ணு வர நேரத்துல 
ஏலாலம்பர ஏலா 

கூவாத குயில் கூவுதடி 
ஏலாலம்பா 
ஏலாலம்பா 
மயிலும் குலுங்கி ஆடுதடி 

ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா
ஏலாலம்பர ஏலாலம்ப ஏலாலம்ப ஏலா
++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்

Movie: Chittu Kuruvi
Music: Ilaiyaraaja
Year: 1978
Lyrics: Vaali
Singers: P.Susheela and S.P.Balasubramaniam

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்  (ஒரு நாள்....)

மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே

உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ

புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட..
புதுமைகள் காண

காண்போமே எந்நாளும் திருநாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒன்ன நம்பி நெத்தியிலே

Movie: Chittu Kuruvi
Music: Ilaiyaraaja
Year: 1978
Lyrics: Vaali
Singers: P.Susheela 

ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா

ஒன்னாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் காணாக் கண்டு கண்ணு முழிச்சேனே
ஒன்ன நம்பி நெத்தியிலே

ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு
ஒன்ன நம்பி நெத்தியிலே

ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடடட மாமர கிளியே

Movie: Chittu Kuruvi
Music: Ilaiyaraaja
Year: 1978
Lyrics: Vaali
Singers: S.Janaki 

அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே

உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக்கணக்கா பூசி குளிச்சேன் 
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு 
உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக்கணக்கா பூசி குளிச்சேன் 
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு 

அடடடா மாதுளம் கனியே இத இன்னும் நீ நெனைக்கலையே 
கிட்ட வாயேன் கொத்தி போயேன் உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே

உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும் 
அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு 
உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும் 
அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு 

அடடடா தாமரை கோடியே இது உன் தோள் தொடவில்லையே 
சொல்லு கண்ணு சின்ன பொண்ணு இத நீ அணைக்கலையே அணைக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே

மீன பிடிக்க தூண்டில் இர்ருக்கு இருக்கு பிடிக்க தொட்டி இருக்கு 
அட உன்னத்தான் நான் புடிக்க கண் ஆளையே தூண்டி 
அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே 

இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலயே படுக்கலயே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
என் கண்மணி

Movie: Chittu Kuruvi
Music: Ilaiyaraaja
Year: 1978
Lyrics: Vaali
Singers: P.Susheela and S.P.Balasubramaniam

என் கண்மணி உன் காதலி 
இள மாங்கனி
உனை பார்த்ததும் 
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன் உன் காதலன் 
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ    (என் கண்மணி...)

இரு மான்கள் பேசும் போது 
மொழி ஏதம்மா...ஆ...
பிறர் காதில் கேட்பதற்கும் 
வழி ஏதம்மா... ஆ... ஆ...

ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் 
பயணங்களில்...
உறவன்றி வேறு இல்லை 
கவனங்களில்...

இளமாமயில்...

அருகாமையில்...

வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ

இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ

என் மன்னவன் உன் காதலன் 
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ   (என் கண்மணி...)

தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் எறங்கு...

மெதுவாக உன்னைக் கொஞ்சம் 
தொட வேண்டுமே... ஏ...
திருமேனி எங்கும் விரல்கள் 
பட வேண்டுமே... ஏ... ஏ...

அதற்காக நேரம் ஒன்று 
வர வேண்டுமே... ஏ...
அடையாளச் சின்னம் அன்று 
தர வேண்டுமே...

இரு தோளிலும் மண மாலைகள்

கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி 
இள மாங்கனி
உனை பார்த்ததும் 
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன் 
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ   (என் கண்மணி...)

Sources: http://www.tamilpaa.com

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...