கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Saturday, May 7, 2016

தர்மத்தின் தலைவன்

தர்மத்தின் தலைவன் திரைப்பட பாடல்கள்

முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக

பல்லவி

முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஒ..

சரணம் 

காதல் தேவன மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன நெஞ்சில் நான் ஆடுவேன்
கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்
மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
 என்னோடு நீ ஆட ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள் நான் காண தானே
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா
காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..

ஆ.. முத்தமிழ் கலையே வருக  
முக்கனிச் சுவையும் தருக

சரணம் 

தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து
நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள்  அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா
என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..

முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக

Sources: http://goo.gl/9FMZtu
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தென் மதுரை வைகை  நதி    

தென் மதுரை வைகை  நதி    
தினம்  பாடும்  தமிழ் பாட்டு  
தேய்கின்றது  பொன் மாலை நிலா  
தேயாதது  நம்  ஆசை  நிலா   
இது  வானம்  போலே  வாழும்  பாசம்    (தென் மதுரை)   

நம்மை  போல  நெஞ்சம்  கொண்ட   
அண்ணன்  தம்பி  யாரும்  இல்லை   
தன்னை  போல  என்னை  என்னும்   
நீயும்  நானும்  ஓர்  தாய்  பிள்ளை   

தம்பி  உந்தன்  உள்ளம்தானே   
அண்ணன்  என்றும்  வாழும்  எல்லை   
ஒன்றை  காணும்  வானம்  என்றும்   
ரெண்டை  மாற  ந்யாயம்  இல்லை   

கண்ணோடுதான்  உன்  வண்ணம்   
நெஞ்சோடுதான்  உன்  எண்ணம்   
முன்னேறு  நீ  மென்மேலும்   
என்னாசிகள்  கை  கூடும்   
இந்த  நேசம்  பாசம்  நாளும்  வாழ்க    (தென் மதுரை)   

நெஞ்சில்  என்னை  நாளும்  வைத்து   
கொஞ்சும்  வண்ண  தோகை  ஒன்று   
மஞ்சள்  மாலை  மேளம்  யாவும்   
கண்ணில்  காணும்  காலம்  இன்று   

பூவை  சூடி  பொட்டும்  வைக்க   
மாமன்  உண்டு  மானே  மானே   
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட  
கள்வன்  இங்கு நானே  நானே  

உன்னோடுதான்  என் ஜீவன்  
ஒன்ற க்கினான்   நம்  தேவன்   
நீதானம்மா  என்  தாரம்   
மாறாதம்மா  என்னாலும்   
இந்த  நேசம்  பாசம்  நாளும்  வாழ்க    (தென் மதுரை)


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...