கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Saturday, May 7, 2016

என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது - பி சுசிலா

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி

கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு

குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே

குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்

விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

Sources: Enakku Piditha பாடல் Varigal Facebook Page

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
Singers : P.Jayachandran, Sunandha
Year : 1989

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கை தீண்டினால்தான் கல்யாணி பாடும்
எழுதாத புது இலக்கியம் உயிர்க்காதலில் விளையும்
இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்
மேளம் முழங்கவும் மாலை வழங்கவும்
வேளை வருகையிலே
பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும்
கானக் கருங்குயிலே
ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில்
ஆனந்த பூஜை தொடங்குமோ

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா

கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி
நிறுத்தாமல் மலர்கணைகளை விடும் வாலிபம் இதுதான்
அரங்கேற தினம் இரவினில வரும் நாடகம் இதுதான்
பிள்ளை பிறந்ததும் பள்ளியறை கொஞ்சம்
மூடிக் கிடக்கட்டுமே
கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம்
ஆடிக் கிடக்கட்டுமே
மூச்சு இருக்கின்ற காலம் வரையினில்
மோகத்தின் வேகம் குறையுமோ

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா

Sources: http://www.ilayarajahits.in


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...