கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Saturday, May 7, 2016

புது புது அர்த்தங்கள்

படம் : புது புது அர்த்தங்கள்
பாடல் : கல்யாண மாலை
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அரியாதது
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோச சாம்ராஜ்யமே…

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோரும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்…

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்

Sources: https://tamilpaadalvari.wordpress.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி கண்மணி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி கண்மணி)

நீங்காத நேரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

(கேளடி கண்மணி)

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...