கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Monday, May 9, 2016

பார்த்தால் பசிதீரும்

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன்

கொடியசைந்ததும் காற்று வந்ததா?....

கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவன் வந்ததா?
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?

கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
ம்ம்ம்ம்ம் ஓஹொஹோஹொஹோ
ம்ம்ம்ம்ம் ஓ..ஓ ஓ
++++++++++++++++++++++++++++++++++++

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: p. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: m.s. விஸ்வநாதன்

பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்...

ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. ஓஓஓ
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்

சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ

பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்

பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
பார்த்தால் பசி தீரும்

பொன்னாடை போர்த்திவரும் புள்ளிமயில் போலிருக்கும்
பெண்ணாகப் பிறந்தவரை பிந்தொடர்ந்து உலகம் வரும்
ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ

பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர்
இசை:m.s. விஸ்வநாதன்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்....

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ? - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: m.s. விஸ்வநாதன்

உள்ளம் என்பது ஆமை.....

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
++++++++++++++++++++++++++++++++++++

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: a.l. ராகவன், p. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: m.s. விஸ்வநாதன்

அன்று ஊமைப் பெண்ணல்லோ....

ஆனா ஆனா ஆவன்னா ஆவன்னா இன இன ஈயன்ன
உன உன ஊவன்னா என என ஏயன்னா ஏயன்னா
ஓனா ஓனா ஓவன்னா ஓவன்னா ஔவன்னா ஔவன்னா அஃகன்னா அஃகன்னா

கசடதபற கசடதபற வல்லினமாம் வல்லினமாம்
ஙஞண்நமன ஙஞண்நமன மெல்லினமாம் மெல்லினமாம்
யரலவழள யரலவழள இடையினமாம் இடையினமாம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஒஹோஹோஹோஹோ
ஹொஹோஹோஹொஹோஹொஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோஹோஹோஹோஹோ
ஹோஹோஹோஹோஹோஹோஹோ

அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - ஐயா
உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - ஐயா
உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ

ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஹோஓஹோ ஓஹோ ஹொஹோஹோஹோ
ஓஹோஹோ ஹொஹோஹோ ஹொஹோஹோ ஹோய்

வண்ணத்தமிழ்ச் சேலை கட்டிக் கொண்டல்லோ
கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோஹோ

காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஓ
மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ - நெஞ்சில்
ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...