கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Thursday, November 15, 2018

ஒன்பது கோளும் ஒன்றாய் காண

\

ஒன்பது கோளும் ஒன்றாய் காண


அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்

அதுவே ஆனை முகம் எனும்
ஓம்கார விளக்கம்
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்

அவனை தொழுதால் போதும்

நல்லதே நடக்கும்
ஆனை முகனை தொழுதால்
நவகிரகங்களும் மகிழும்

நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்...


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

(ஒன்பது)


சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்

பல வித குணங்களை கொண்டிருக்கும்
எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது
ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

(ஒன்பது)


சூரிய பகவான் ஒளி முகம் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்
கதிரவன் தரிசனம் பெற வேண்டும்

(சூரிய)


இருளை விலக்கி உலகை எழுப்பும்

ஞாயிறு அங்கே குடியிருப்பான்
அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில் 
ஒளியாய் வந்து குடியிருப்பான்

(நவகிரக)


(ஒன்பது)


திங்கள் பகவான் திரு முகம் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்
குளிரும் அவனை தொழ வேண்டும்

(திங்கள்)


பார்கடல் பிறந்த சந்திர பகவான்

கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்
எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு
தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்

(நவகிரக)


(ஒன்பது)


அங்காரகனவன் தங்கும் இடமே

கணபதியாரின் வலத் தொடையே
அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்
வணங்கிட வேண்டும் கணபதியை

(அங்காரகனவன்)


நெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்

மழையாய் மாறி பொழிந்திடுவான்
அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்
மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்

(நவகிரக)


(ஒன்பது)


புத பகவானின் பத மலர் இரண்டும்

பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே
எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே
புதனவன் தரிசனம் கிடைக்கிறதே

(புத)


ஞான தேவியின் கணவன் புதனாம்

ஞானம் நமக்கு கைக் கூடும்
எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண
வாக்கு வன்மையும் கை சேரும்

(நவகிரக)


(ஒன்பது)


குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்
நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்
குடி வந்த குருவை தொழ வேண்டும்

(குருவின்)


ஆலமர் செல்வன் அவனது பார்வை

தடைகளை நீக்கி வளம் பெருக்கும்
நம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்
மாங்கல்ய பலமே திடமாகும்

(நவகிரக)


(ஒன்பது)


சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்
எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே
இருக்கும் அவனை தொழ வேண்டும்

(சுக்கிரன்)


புத்திர பாக்கியம் தருகிற பகவான்

சுக்கிரன் அங்கே குடியிருப்பான்
அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு
பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்

(நவகிரக)


(ஒன்பது)


அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க

பிள்ளையர் பட்டி வர வேண்டும்
எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே
வாழும் அவனை தொழ வேண்டும்

(அட்டமச்)


வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்

சனி பகவானின் செயலல்லவா
அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு
சனியின் பார்வை நலமல்லவா

(நவகிரக)


(ஒன்பது)


திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்

பிள்ளையர் பட்டி வரலாமே
எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே
இருக்கும் ராகுவை தொழலாமே

(திருநாகேஸ்வரம்)


பிணிகளை தருகிற பகவான் அவனே

மருத்துவம் செய்வான் தெரியாதா
ராகுவின் பதத்தை கணபதி கை மேல்
கண்டால் நன்மைகள் விளையாதா

(நவகிரக)


கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே
மலரும் கேதுவை தொழ வேண்டும்

(கேதுவின்)


ஐந்து தலையோடு எழுந்த சுவக் கேது

கணபதி தொடையில் கொலுவிருப்பான்
அவன் தொடரும் பிணிகளை நடுங்கச் செய்வான்
தொழுதால் தொல்லைகள் நீக்கிடுவான்

(நவகிரக)


(ஒன்பது)


Sources: http://www.bhajanlyricsworld.com


Also visit the related links:


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்


1. https://ta.wikipedia.org


2. http://temple.dinamalar.com


3. http://www.pillaiyarpattitemple.com


4. https://tamil.thehindu.com


5. http://www.dinamani.com


6. https://www.maalaimalar.com


7. http://pillayarpattitrust.com


Location of Templeஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...